திருத்தணி அருகே 8 கடைகளில் கொள்ளை

ரியல் எஸ்டேட் அலுவலகம் மற்றும் மளிகை கடை உள்ளிட்ட 8 கடைகளை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றதுபோலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
திருத்தணி அருகே 8 கடைகளில் கொள்ளை
Published on

திருத்தணி:

திருத்தணி அடுத்த திருவாலங்காடு பகுதியை சார்ந்த மணவூர் ரெயில் நிலையம் அருகில் நள்ளிரவில் பஞ்சர் கடை, சுவீட் கடை, பங்க் கடை, ஸ்டுடியோ, ரியல் எஸ்டேட் அலுவலகம் மற்றும் மளிகை கடை உள்ளிட்ட 8 கடைகளை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது இதில் பஞ்சர் கடையில் இருந்த ரூ.2000 பணம், அருகில் இருந்த மளிகை கடையில் இருந்த ரூ.10 ஆயிரம் பணம், ரு.60 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தன. இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து திருவாலங்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com