பொன்னேரி அருகே தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் குடும்பத்துடன் 5-வது நாளாக தொடர் போராட்டம்

பொன்னேரி அடுத்த சின்னம்பேடு பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது.கடந்த 4 நாட்களாக இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இன்று அவர்களது போராட்டம் 5-வது நாளாக நீடித்து வருகிறது.
பொன்னேரி அருகே தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் குடும்பத்துடன் 5-வது நாளாக தொடர் போராட்டம்
Published on

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த சின்னம்பேடு பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் ஒப்பந்த பணியாளர்களாகவும், நிரந்தர பணியாளர்களாகவும் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் தொழிற்சாலை முன்பு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை உடனே வழங்கிட வேண்டும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பணப்பலன்களை வழங்கிட வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளை மீண்டும் பணியமர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இன்று அவர்களது போராட்டம் 5-வது நாளாக நீடித்து வருகிறது. அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com