தாண்டிக்குடியில் விபத்தில் பலியான பெண்ணின் கண்கள் தானம்

பைக்கில் இருந்து தவறி விழுந்த பிரியா படுகாயம் அடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாண்டிக்குடியில் விபத்தில் பலியான பெண்ணின் கண்கள் தானம்
Published on

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது மனைவி பிரியா (வயது 47). இவர்களுக்கு சந்தோஷ், விக்ரம் என்ற 2 மகன்கள் உள்ளனர். சுரேந்திரன் கடந்த வாரம் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சாமி கும்பிட சென்றார். அப்போது மலைச்சாலையில் பைக்கில் இருந்து தவறி விழுந்த பிரியா படுகாயம் அடைந்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே உயிரிழந்த பிரியாவின் கண்கள் அவரது குடும்பத்தினர் அனுமதியுடன் தானமாக வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com