என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்லடம் அருகே இன்று நூற்பாலையில் தீ விபத்து
- சித்தம்பலத்தில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலத்தில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று காலை அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் முடியவில்லை.
இதைத்தொடர்ந்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் விண்ணை முட்டும் அளவுக்கு புகைமூட்டம் சூழ்ந்தது. தீ விபத்தில் ஆலையில் இருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






