வல்லூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

அத்திப்பட்டு புதுநகரில் வல்லூர் அனல் மின் நிலையம் உள்ளது.மூன்றாவது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
வல்லூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
Published on

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்து அத்திப்பட்டு புதுநகரில் வல்லூர் அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள மூன்று அலகுகளில் தலா 500 மெகாவாட் என மொத்தம் 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மூன்றாவது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்ட 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com