தேசிய சீனியர் கூடைப்பந்து: இறுதிப்போட்டி ஆர்வத்தில் தமிழக அணிகள்- இந்தியன் ரெயில்வேயுடன் இன்று மோதல்

தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தமிழக அணி-இந்தியன் ரெயில்வே அணியுடன் இன்று மோதுகிறது.
தமிழ்நாடு-பஞ்சாப் அணிகள் கால் இறதியில் மோதிய காட்சி
தமிழ்நாடு-பஞ்சாப் அணிகள் கால் இறதியில் மோதிய காட்சி
Published on

சென்னை:

தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் 71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 81-57 என்ற கணக்கில் கேரளாவை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. தமிழ்நாடு அணியில் கேப்டன் முயின்பேக் 17 புள்ளியும், அரவிந்த் 15 புள்ளியும் , ஜீவானந்தம் 10 புள்ளியும் எடுத்தனர்.

தமிழக அணி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் அரையிறுதியில் இந்தியன் ரெயில்வேயை எதிர்கொள்கிறது.

ரெயில்வே அணியை வீழ்த்தி தமிழ்நாடு இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. தமிழக அணி முதல் சுற்று லீக்கில் டெல்லி, மிசோரம், உத்தரகாண்டையும், 2-வது சுற்று லீக்கில் அரியானா, ரெயில்வேயையும் தோற்கடித்து இருந்தது. தோல்வி எதையும் சந்திக்காததால் தமிழக அணி நம்பிக்கையுடன் இருக்கிறது.

மற்றொரு அரை இறுதியில் பஞ்சாப்- கர்நாடகா அணிகள் (மாலை 4 மணி) மோதுகின்றன.

தமிழக பெண்கள் அணி கால் இறுதியில் 73-70 என்ற கணக்கில் பஞ்சாப்பை வீழ்த்தியது. இன்று பிற்பகலில் நடைபெறும் அரை இறுதியில் தமிழக அணி ரெயில்வே அணியை எதிர் கொள்கிறது. ஏற்கனவே அந்த அணியிடம் தமிழகம் ‘லீக்’ சுற்றில் தோற்று இருந்தது.

மற்றொரு அரை இறுதியில் கேரளா-தெலுங்கானா அணிகள் மோதுகின்றன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com