சூலூர் அருகே வீடு புகுந்து நகை திருடிய கட்டிடத் தொழிலாளி-பெண் கைது

ரோஸியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ரோஸிக்கும், ரத்னாவுக்கு அடிக்கடி சிறு, சிறு தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளது.போலீசார் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
சூலூர் அருகே வீடு புகுந்து நகை திருடிய கட்டிடத் தொழிலாளி-பெண் கைது
Published on

சூலூர்:

கோவை சூலூர் அருகே உள்ள கலங்கல் தென்றல் நகரை சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவரது மனைவி ரத்னா (வயது42). ரோடு காண்டிராக்டர்.

சம்பவத்தன்று இவர் கதவை திறந்து வைத்து விட்டு வீட்டில் உள்ள அறையில் படுத்து தூங்கினார். அப்போது வீட்டிற்குள் இருந்து பொருட்களை எடுப்பது போன்ற சத்தம் வந்தது.

இதனால் அதிர்ச்சியான அவர் கண்விழித்து அறையில் இருந்து எழுந்து, சத்தம் கேட்ட இடம் நோக்கி வந்தார். அப்போது 2 பேர் உடல் முழுவதும் பர்தா அணிந்தபடி நின்றிருந்தனர்.

ரத்னா அவர்கள் 2 பேரையும் பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள், ரத்னாவை தள்ளிவிட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து ரத்னா வீட்டில் பொருட்கள் ஏதாவது திருடு போய் உள்ளதா? என பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த 2 பவுன் தங்க செயின் மாயமாகி இருந்தது.

உடனடியாக ரத்னா சூலூர் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து செயின் திருடிய சூலூர் கலங்கல் ரோட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ஹானஸ்ட்ராஜ் (24), தென்றல் நகரை சேர்ந்த யேசுதாஸ் என்பவரின் மனைவி ரோஸி (48) ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்ந்து ரோஸியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ரோஸிக்கும், ரத்னாவுக்கு அடிக்கடி சிறு, சிறு தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் அவரை பழிவாங்க அவர் முடிவு செய்துள்ளார். அப்போது தான் அவரது வீட்டிற்கு கட்டிட தொழிலாளியான ஹானஸ்ட்ராஜ் என்பவர் பணிக்கு வந்துள்ளார்.

அவரிடம் இதுகுறித்து கூறி, ரத்னாவின் வீட்டில் நகையை திருட வைக்க முடிவு செய்து, இந்த திட்டத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com