என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லையில் சப்-இன்ஸ்பெக்டர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை
- விக்னேஷ் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9-ம் அணி மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
- கற்பக விநாயகத்திற்கு சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பாலமுருகன். இவரது மனைவி விஜயலெட்சுமி. இவர்களுக்கு கற்பகவிநாயகம் (வயது27), விக்னேஷ் (24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இதில் இளைய மகன் விக்னேஷ் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9-ம் அணி மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். கற்பக விநாயகத்திற்கு சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தூங்க சென்ற கற்பக விநாயகம், நேற்று மாலை வரை கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அறையில் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சந்திப்பு போலீசார் அங்கு விரைந்து சென்று கற்பக விநாயகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






