பரமக்குடியில் கல்லூரி பேராசிரியரை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பரமக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பரமக்குடியில் கல்லூரி பேராசிரியரை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Published on

பரமக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாகவும், ஜாதி ரீதியாகவும் பேசி தொல்லை தருவதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அந்த பேராசிரியர் மாணவிகளிடம் பேசிய ஆடியோவும் வெளியானது. இதனால் கல்லூரி மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை கண்டித்தும், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த பரமக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com