பாட்டி திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்ததால் மாணவியை பாட்டி சுமதி திட்டியதாக கூறப்படுகிறது.மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாட்டி திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
Published on

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் அடுத்த சாலவான் குப்பம் பகுதியை சேர்ந்தவர் தாஸ். இவரது மகள் பிரியங்கா (வயது15). அப்பகுதியில் உள்ள பாட்டி சுமதியின் வீட்டில் தங்கி இருந்து நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்ததால் மாணவி பிரியங்காவை பாட்டி சுமதி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரியங்கா வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com