என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
தூத்துக்குடியில் அரசு பஸ் மீது கற்கள் வீசி தாக்குதல்- கண்ணாடி உடைப்பு
- தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை வழியாக ஒரு அரசு பஸ் சென்றது.
- முன்பக்க கண்ணாடி உடைந்து பஸ்சின் உள்ளே இருந்த பயணிகளில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை வழியாக ஒரு அரசு பஸ் சென்றது. பஸ்சை தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையை சேர்ந்த லிங்கப்பண்டி (வயது 38) என்பவர் ஓட்டிச்சென்றார். இதில் சுமார் 40 பயணிகள் பயணம் செய்தனர். பஸ் மூன்றாம் மைல் அருகே சென்றபோது மர்ம நபர் ஒருவர் பஸ் மீது கற்களை வீசி தாக்கினார்.
இதில் முன்பக்க கண்ணாடி உடைந்து பஸ்சின் உள்ளே இருந்த பயணிகளில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து டிரைவர் லிங்கபாண்டி தென்பாகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கங்கைநாதபாண்டியன், சிவக்குமார், கதிரேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஆறுமுகநேரியை சேர்ந்த கூலித்தொழிலாளி மாடசாமி ( 40) என்பவர் குடிபோதையில் பஸ் மீது கற்களை வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.