என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெம்மேலி அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா- மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் பங்கேற்பு
- கடந்த திங்கள் கிழமையில் இருந்து 7பேர் கொண்ட விளையாட்டு குழுவினரால் ஆண்கள் பிரிவு பெண்கள் பிரிவு என தனித்தனியாக நடத்தப்பட்டது.
- விளையாட்டு விழா இன்று கல்லூரியில் நடத்தப்பட்டது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 950 மாணவ, மாணவிகள் பல்வேறு பாடப் பிரிவுகளில், பட்டப்படிப்பு படித்து வருகிறார்கள்., அவர்களின் விளையாட்டு திறனுக்கான பயிற்சி மற்றும் போட்டிகள், கடந்த திங்கள் கிழமையில் இருந்து 7பேர் கொண்ட விளையாட்டு குழுவினரால் ஆண்கள் பிரிவு பெண்கள் பிரிவு என தனித்தனியாக நடத்தப்பட்டது.
அதன் விளையாட்டு விழா இன்று கல்லூரியில் நடத்தப்பட்டது., கபடி, செஸ், வாலிபால், கோகோ, கிரிக்கெட், ஓட்டம் என பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் சுகந்தி தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் பதக்கங்கள், சான்றிதழ், கோப்பைகளை வழங்கினார்.
Next Story






