search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் மத்திய துணை ராணுவ படை வீரர் கைது
    X

    சீர்காழி சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் மத்திய துணை ராணுவ படை வீரர் கைது

    • சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
    • கொலையாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி கனிவண்ணனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கனிவண்ணன் (வயது 27). சமையல் மாஸ்டர். இவர் கடந்த 2-ந்தேதி இரவு கொலை செய்யப்பட்டார்.

    இதுகுறித்து, சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மேற்பார்வையில்தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். கொலையாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி கனிவண்ணனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் கணிவண்ணன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், கனிவண்ணன் மத்திய துணை ராணுவ படையை சேர்ந்த ஒருவரிடம் தொலைபேசியில் பேசியது தெரியவந்தது. இதுகுறித்த தீவிர விசாரணையில் மத்திய துணை ராணுவ படை வீரர் தேவேந்திரன் (52) என்பதும், இருவரும் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து, சீர்காழி தென்பாதியில் உள்ள தேவேந்திரனின் வீட்டிற்கு நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மற்றும் தனிப்படை போலீசார் சென்று சோதனை நடத்தினர். அதில் ஒரு கை துப்பாக்கி, 6 தோட்டாக்கள், 3 காலி தோட்டாக்கள் ஆகியவை வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

    இவை அனைத்தும் கொலை வழக்குடன் ஒத்துப்போனதால் தேவேந்திரனிடம் போலீசார் மீண்டும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் கிடைத்த தகவலின்படி, போலீசார் அங்கிருந்து புறப்பட்டு தேவேந்திரனின் சொந்த ஊரான வைத்தீஸ்வரன் கோவில் அருகே சேத்தூர் கிராம உடையூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.அங்கிருந்து, மேலும் ஒரு துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் காலித்தோட்டாக்களை போலீசார் கைப்பற்றினர்.

    இதன் மூலம் கனிவண்ணனை, அவரது நண்பர் தேவேந்திரன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதை தொடர்ந்து போலீசார் தேவேந்திரனை கைது செய்தனர். சமையல் மாஸ்டரை அவரது நண்பரே துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×