சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரெயில் மோதி மாணவி பலி

எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் ஷெர்லி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஷெர்லி பரிதாபமாக இறந்தார்.செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரெயில் மோதி மாணவி பலி
Published on

வண்டலூர்:

சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள வெங்கடபுரம் பகுதியை சேர்ந்தவர் சைமன் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகள் ஷெர்லி (வயது 15). இவர் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை ஷெர்லி பள்ளி முடிந்ததும், டியூசன் வகுப்புக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். அவர் அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் ஷெர்லி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஷெர்லி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான மாணவி ஷெர்லியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக செங்கல்படடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com