திருச்சி அருகே கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்

திருச்சி கிராப்பட்டிஅண்ணா நகர் பகுதியில் 62-வது வார்டில் இருந்து பட்டியல் இன மக்களை 58-வது வார்டுக்கு பகுதிக்கு மாற்றியுள்ளார்கள்.
போராட்டம்
போராட்டம்
Published on

திருச்சி:

கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் திராவிடமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருச்சி கிராப்பட்டிஅண்ணா நகர் பகுதியில் 62-வது வார்டில் இருந்து பட்டியல் இன மக்களை 58-வது வார்டுக்கு பகுதிக்கு மாற்றியுள்ளார்கள். இந்த செயல் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் 200 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது.

இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த வயதானவர்கள் இளம்பெண்கள் கர்ப்பிணிப்பெண்கள் உட்பட அனைவரும் பாதிக்கும் நிலை உருவாகும்.

ஆகவே இந்த செயலை கண்டித்து நாங்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com