என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலிகிராமம்-ராமாபுரத்தில் 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளை
- வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டி சென்றுவிட்டனர்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்து வருகிறார்கள்.
போரூர்:
சென்னை ராமாபுரம், கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு புதுக்கோட்டைக்கு சென்றார். இதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டி சென்றுவிட்டனர்.
சாலிகிராமம், பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் சைதாப்பேட்டையில் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவர் காற்று வாங்குவதற்காக வீட்டை திறந்து வைத்து படுத்து தூங்கினார்.
இதை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த 2 செல்போன் மற்றும் ரூ.34 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டி சென்றுவிட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது பணம் செல்போன் திருடு போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இந்த 2 கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்து வருகிறார்கள்.