செங்குன்றத்தில் இன்று காலை மின்வாரிய அலுவலகத்தில் தீ விபத்து

மின்வாரிய அலுவலகத்தின் ஆவணங்கள் இருந்த அறையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேவந்தது. செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்குன்றத்தில் இன்று காலை மின்வாரிய அலுவலகத்தில் தீ விபத்து
Published on

செங்குன்றம்:

செங்குன்றம், காமராஜர் நகர், பைபாஸ் சாலையில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. நேற்று இரவு பணி முடிந்ததும் வழக்கம்போல் ஊழியர்கள் அலுவலகத்தை மூடிச்சென்றனர்.

இன்று அதிகாலை 3 மணி அளவில் மின்வாரிய அலுவலகத்தின் ஆவணங்கள் இருந்த அறையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேவந்தது. சிறிது நேரத்தில் தீ மள, மளவென அறைமுழுவதும் பற்றி எரிந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த காவலாளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக செங்குன்றம, மாதவரத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

அவர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். எனினும் அறையில் இருந்த கம்ப்யூட்டர்கள், முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது. மற்ற அறைகளுக்கு தீ பரவாததால் பெரிய தீவிபத்து தவிர்க்கப்பட்டது.

மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com