

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில் கிளியனூர் மதுவிலக்கு சோதனை சாவடியில்ஏட்டு ஸ்ரீபதி மற்றும் போலீசார் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த டாடா சுமோ காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். உடனடியாக கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
உஷாரான போலீசார் அந்த காரில் சோதனை செய்தனர். அப்போது புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட 48 அட்டை பெட்டிகளில் மொத்தம் 1,392 மதுபாட்டில்கள் இருந்தது.
இதனை போலீசார் கோட்டகுப்பம் மதுவிலக்கு அமல் பிரிவில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.