search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிறந்த நாளன்று யாரும் என் வீட்டுக்கு வரவேண்டாம்- வேண்டுகோள் விடுத்த சசிகலா
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பிறந்த நாளன்று யாரும் என் வீட்டுக்கு வரவேண்டாம்- வேண்டுகோள் விடுத்த சசிகலா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து உங்களையெல்லாம் சந்திக்க இருக்கிறேன்.
    • மண்ணை நேசிப்போம், மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்.

    சென்னை:

    சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எனது பிறந்த நாளன்று, சென்னையில் உள்ள இல்லத்தில் என்னை நேரில் வந்து சந்திக்க விரும்புவதாக தொடர்ந்து கோரிக்கை வருவதை அறிந்து கொண்டேன். உங்களுடைய அன்புக்கு நான் என்றைக்குமே அடிமை உங்களுடைய அன்பும், ஆதரவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.

    நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து உங்களையெல்லாம் சந்திக்க இருக்கிறேன். உங்களோடு நேரில் உரையாட இருக்கிறேன். ஆகையால், தற்சமயம் எனது பிறந்தநாளுக்காக, நீங்கள் சிரமப்பட்டு, பயணித்து எனது இல்லம் வருவதை தவிர்த்துவிட்டு, தாங்கள் இருக்கும் பகுதியிலேயே உங்கள் அருகில் இருக்கும் ஏழை-எளிய சாமானிய மக்களுக்கு உங்களால் இயன்ற அளவில் நீங்கள் செய்கின்ற உதவிகளே, நீங்கள் எனக்கு அளிக்கின்ற, சிறந்த பிறந்த நாள் பரிசாக, மனதார ஏற்றுக்கொள்கிறேன்.

    இந்த மண் நம்மை போன்ற நல்லவர்களை உண்மையானவர்களை, உறுதியானவர்களை மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை எதிர்பார்த்து தான் இன்றைக்கும் காத்துக் கொண்டு இருக்கிறது. ஆகவே மண்ணை நேசிப்போம், மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

    Next Story
    ×