search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் ஜீப் திருட்டு
    X

    சேலம் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் ஜீப் திருட்டு

    • விசாரணையில் அவர் ஏற்கனவே ஒரு போலீஸ் ஜீப்பை இந்த மைதானத்தில் இருந்து திருடி இருப்பது தெரியவந்தது.
    • போலீஸ் ஜீப் திருட்டு போன சம்பவம் உயர் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    சேலம்:

    சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் ஜீப் ஒன்றை தாரமங்கலம் தொளசம்பட்டி பிரிவு ரோட்டை சேர்ந்த மதன்குமார் (வயது 38) என்பவர் திருட முயன்றார். இதை கண்ட போலீசார், அவரை கையும், களவுமாக பிடித்தனர்.

    விசாரணையில் அவர் ஏற்கனவே ஒரு போலீஸ் ஜீப்பை இந்த மைதானத்தில் இருந்து திருடி இருப்பது தெரியவந்தது. தற்போது 2-வது முறையாக திருட வந்தபோது மதன்குமார் சிக்கினார்.

    இதையடுத்து அஸ்தம்பட்டி போலீசார், மதன்குமாரை கைது செய்து அவரிடம் இருந்து திருடப்பட்ட போலீஸ் ஜீப்பை மீட்டனர். அவர் முதல்-அமைச்சரின் பொது நிவராண நிதித்துறை உதவி இயக்குனர் என்ற அடையாள அட்டை வைத்திருந்தார். பிளஸ்-2 வரை படித்துள்ள மதன்குமார், இந்த அடையாள அட்டையை போலியாக தயாரித்து தனது சொகுசு கார் முன்பக்கத்தில் அரசு முத்திரை பொருத்தி வலம் வந்து அரசு அதிகாரி போல் நடித்து பலரிடம் கைவரிசை காட்டி உள்ளார் என்பது தெரியவந்தது. அவர் பயன்படுத்திய சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    போலீஸ் ஜீப் திருட்டு போன சம்பவம் உயர் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் ஜீப் திருட்டு போனது குறித்து, 3 நாளில் விசாரித்து அறிக்கை அளிக்க, ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார் அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணி விசாரணையை தொடங்கியுள்ளார். அவர் வழங்கும் அறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×