search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் ரத்து
    X

    பல்லடத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் ரத்து

    • ஊர்வலத்தின் நிறைவாக சிறப்பு பொது கூட்டம் கொசவம்பாளையம் ரோட்டில் உள்ள அங்காளம்மன் கோவில் எதிரில் உள்ள மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
    • ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் திரளான ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நாளை 6-ந் தேதி பல்லடம் பொள்ளாச்சி ரோடு வடுகபாளையத்தில் நடைபெற இருந்தது. இது தொடர்பாக அனுமதி கேட்டு பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பல்லடத்தில் மட்டும் ஊர்வலம் நடைபெற இருந்தது.

    ஊர்வலத்தின் நிறைவாக சிறப்பு பொது கூட்டம் கொசவம்பாளையம் ரோட்டில் உள்ள அங்காளம்மன் கோவில் எதிரில் உள்ள மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

    ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் திரளான ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கூட்டத்தில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்க இருந்தனர்.

    இந்தநிலையில் தமிழகத்தில் பல்லடம் மற்றும் சில இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் பல்லடத்தில் நாளை நடைபெற இருந்த ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது.

    Next Story
    ×