வங்கி அதிகாரி போல் பேசி பெண்ணின் கிரெடிட் கார்டில் ரூ.34 ஆயிரம் மோசடி

வங்கி சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறிய மர்மநபர் நூதனமான முறையில் பண மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கி அதிகாரி போல் பேசி பெண்ணின் கிரெடிட் கார்டில் ரூ.34 ஆயிரம் மோசடி
Published on

போரூர்:

வடபழனி தரன்சிங் காலனி பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா உமாபதி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் வங்கி ஒன்றில் கிரெடிட் கார்டு வாங்கினார். இந்த நிலையில் கவுசல்யாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு வங்கி அதிகாரி போல் மர்மநபர் பேசினார்.

அப்போது கவுசல்யா தனது கிரெடிட் கார்டு எண் மற்றும் ரகசிய ஓ.டி.பி எண் விபரங்களை அவரிடம் கொடுத்தார். சிறிது நேரத்தில் கிரெடிட் கார்டு கணக்கில் இருந்து 34ஆயிரத்து 581 ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததை கண்டு கவுசல்யா அதிர்ச்சி அடைந்தார்.

வங்கி சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறிய மர்மநபர் நூதனமான முறையில் பண மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com