என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராமாபுரத்தில் மகன் பள்ளிக்கு செல்லாததால் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
- மனவேதனை அடைந்த சீதா திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
ராமாபுரம், ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீதா (வயது36) டெய்லராக வேலை பார்த்து வந்தார். இவரது கணவர் ராமு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி இறந்து விட்டார். இந்த நிலையில் மகன் கோகுல் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கோகுல் தாயின் பேச்சை கேட்க வில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பள்ளிக்கும் சரிவர செல்லாமல் அவன் தினசரி நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. இதை பலமுறை தாய் சீதா கண்டித்தும் கோகுல் மாறவில்லை. அவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்தான். இதனால் மனவேதனை அடைந்த சீதா திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






