ராமநாதபுரத்தில் அடை மழை: பள்ளிகளுக்கு விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழை
மழை
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம், கீழக்கரை, திருப்புல்லாணி, ஏர்வாடி, மண்டபம், பனைக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது.

இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மழையால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு மக்கள் பெரும் அவதி அடைந்தனர். மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழைநீரில் நடந்து சென்று பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கிராமங்களில் இருந்து பல்வேறு பணிகளுக்காக வந்த தொழிலாளர்கள் மழை காரணமாக திரும்பிச் சென்றனர். இன்று காலை முதல் தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் மழையும் பெய்து வருகிறது.

தொடர்மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று (12-ந் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் அட்டவணைப்படி தொடர்ந்து நடைபெறும் என்று கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com