நிலக்கோட்டையில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய ரவுடி கைது

விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் சுண்ணாம்பு காளவாசல் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் நாகராஜன் என தெரிய வந்தது.போலீசார் சிவகங்கை மாவட்ட போலீசாரிடம் விசாரித்தபோது இவர் மீது பல்வேறு வழக்குகள் அந்த மாவட்டத்தில் இருந்தது தெரிய வந்தது.
நிலக்கோட்டையில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய ரவுடி கைது
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார் ராமராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஒரு வாலிபரை பிடிக்க முயன்ற போது அவர் தப்பி ஓட முயன்றார். இருந்தபோதும் போலீசார் அவரை துரத்தி சென்று பிடித்தனர்.

விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் சுண்ணாம்பு காளவாசல் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் நாகராஜன் (வயது 23) என தெரிய வந்தது. அவரை சோதனை செய்தபோது மிகப்பெரிய அளவிலான பட்டாக்கத்தியை மறைத்து வைத்திருந்தார். இது எதற்கு என்று கேட்டதற்கு வீடுகளில் கொள்ளையடிக்க செல்லும் போது யாரேனும் மிரட்டினால் குத்திக் கொலை செய்து விட்டு தப்புவதற்காக வைத்திருந்தேன் என்றார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சிவகங்கை மாவட்ட போலீசாரிடம் விசாரித்தபோது இவர் மீது பல்வேறு வழக்குகள் அந்த மாவட்டத்தில் இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்கு பதிவு செய்து நாகராஜனை கைது செய்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு நல்லக்கண்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து அவர் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com