புதுக்கடை அருகே ஓடையில் தவறி விழுந்து போலீஸ் ஏட்டு பலி

பெனடிக் ராஜூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கடை அருகே ஓடையில் தவறி விழுந்து போலீஸ் ஏட்டு பலி
Published on

குழித்துறை:

நித்திரவிளை எஸ்.டி.மங்காடு செம்மாவிளை பகுதியை சேர்ந்தவர் பெனடிக் ராஜ் (வயது 42). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3-ந்தேதி பளுகல் சோதனை சாவடியில் பணியில் இருந்தார். பணி முடிந்து 4-ந்தேதி பெனடிக் ராஜ் வீட்டிற்கு திரும்பினார்.

அவர் இருசக்கர வாகனத்தில் நடைக்காவு-சூழல் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள ஓடையில் விழுந்தார். இதில் பெனடிக் ராஜூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பெனடிக் ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com