புழல் சிறையில் கைதிகள் போராட்டம்

பேராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கைதிகள் நல உணவகத்தை மீண்டும் திறக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர்.
புழல் சிறையில் கைதிகள் போராட்டம்
Published on

சென்னை அருகே புழல் சிறையில் வளாகத்தில் விசாரணைக் கைதி சிறை செயல்படுகிறது. இவர்கள் அனைவரும் நேற்று காலை 6 மணியளவில் தங்களது அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போது, சிறையின் இரண்டாவது பிளாக் பகுதியில் இருக்கும் கைதிகள் சுமார் 40 பேர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் கைதிகள், சிறை வளாகத்தில் செயல்பட்டு வந்த கைதிகள் நல உணவகத்தை மீண்டும் திறக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் சிறை அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பிற்பகலில் கைதிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com