பண்ருட்டி கிளை சிறையில் வார்டன்- ஏட்டு மோதல்

பண்ருட்டி கிளை சிறையில் வார்டன்-ஏட்டு மோதலில் படுகாயம் அடைந்த வார்டன் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
மோதல்
மோதல்
Published on

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கும்பகோணம் சாலையில் கிளை சிறை உள்ளது. இங்கு ஏட்டாக ராஜவேல், வார்டனாக சதீஷ்குமார் பணியாற்றி வருகிறார்கள்.

நேற்று- சதீஷ்குமார் பணியில் இருந்தபோது கிளை சிறையில் உள்ள ஒரு கைதியின் உறவினர் அங்கு வந்தார். அப்போது ஏட்டு ராஜகோபால் வார்டன் சதீஷ்குமாரிடம் வந்து இருப்பவர் எனக்கு தெரிந்தவர் தான். எனவே அவரை அனுமதிக்கும்படி கூறினார்.

ஆனால் அதற்கு சதீஷ்குமார் மறுத்து விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அது மோதலாக வெடித்தது.

ஆத்திரம் அடைந்த ராஜகோபால் அங்கு கிடந்த தடியால் சதீஷ்குமாரை தாக்கினார். இதில் அவர் கீழே சுருண்டு விழுந்தார். இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. படுகாயம் அடைந்த சதீஷ்குமார் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் ஆகியோர் வழக்கு பதிவுசெய்து உள்ளனர். சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் 2 பேரை வரவழைத்து விசாரணை நடத்த உள்ளார். அப்போது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com