கடையில் நின்றபோது பெண்ணிடம் நகை பறிப்பு

மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கலைச்செல்வியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் செயினை பறித்து தப்பி சென்று விட்டனர். பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்
கடையில் நின்றபோது பெண்ணிடம் நகை பறிப்பு
Published on

பொன்னேரி:

பொன்னேரி அண்ணாநகரை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் பொன்னேரி அடுத்த சயனாவரம் பகுதியில் உள்ள கடையில் காய்கறிகள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கலைச்செல்வியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் செயினை பறித்து தப்பி சென்று விட்டனர். இந்த காட்சி கடையில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இதனை வைத்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com