பொன்னேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் விழா

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் நந்தினி சண்முகம் ஆகியோர் வெற்றி பெற்றவர்களக்கு பரிசுகளை வழங்கினர்.
பொன்னேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொங்கல் விழா
Published on

பொன்னேரி:

பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சிசார்பில் சமத்துவ பொங்கல் மற்றும் கோலப் போட்டிகள் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பல்வேறு விதமான கோலங்களை வரைந்தனர் போட்டியில் முதல் மூன்று இடத்தில் வெற்றி பெற்ற பெண்களுக்கு தலா 50 ஆயிரம், இரண்டாவதாக ஏழு இடங்களைப் பிடித்த பெண்களுக்கு தலா 25 ஆயிரம் பரிசுகள் வழங்கப்பட்டது பின்னர் கோலப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதனையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பொங்கல் பரிசாக சேலைகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற பெண்களுக்கான பரிசினை திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், காங்கிரஸ் கட்சி மாநிலத் துணைத் தலைவர் சதா சிவலிங்கம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் குணாநிதி, பொன்னேரி நகர மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், சென்னை மாநகராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் நந்தினி சண்முகம் ஆகியோர் வெற்றி பெற்றவர்களக்கு பரிசுகளை வழங்கினர். முன்னதாக காங்கிரஸ் நிர்வாகி ஜோதி சுதாகர் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களை வைஷ்ணவ கல்லூரி பேராசிரியைகள் டாக்டர் பிரேமலதா, டாக்டர் சுபாஷினி, ஆகியோர் தேர்வு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com