கடலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.அந்தந்த பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
Published on

கடலூர்:

ஐ .எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அம்பேத்கர் சிலையை தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி, சிதம்பரம், சேத்தியாதோப்பு ஆகிய 7 உட்கோட்டத்தில் 107 அம்பேத்கர் சிலை உள்ளது.

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் அந்தந்த பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com