என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பூர் ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை
- ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகு அனுப்புகின்றனர்.
- பல இடங்களில் போலீசார் தற்காலிக சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
திருப்பூர்:
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், பிரதமர் மோடி 3 நாட்கள் தமிழகம் வருகை, சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாடு என தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு இருக்க தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பஸ், ரெயில் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகு அனுப்புகின்றனர். வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது.
மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் போலீசார் தற்காலிக சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.






