

திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே உள்ளது கூடப்பாக்கம் கிராமம். இங்கு ஏராளமான தெருநாய்கள் உள்ளன. தெருநாய்கள் செல்வோரையும், இரவு நேரத்தில் வருவோரையும் தொடர்ந்து அச்சுறுத்தி வந்தன.
இந்த நிலையில் கூடப்பாக்கம் கிராமத்தில உள்ள 10-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டன. இது குறித்து திருவள்ளூர் தொண்டு நிறுவனத்தின் தலைவர் விக்னேசுக்கு தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இதில் தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது பற்றி விக்னேஷ் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நாய்களை விஷம் வைத்து கொன்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.