மேல்மிடாலத்தில் பஸ் சிறைபிடிப்பு-மறியல்: 2 பாதிரியார்கள் உட்பட 200 பேர் மீது வழக்கு

நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஹெலன் ஜெனட் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் சாலைப்பணியை முடித்து தருவதாக எழுத்து பூர்வமாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மார்த்தாண்டம் பணிமனை மேலாளர் ஸ்டாலின் போராட்டம் தொடர்பாக கருங்கல் போலீசில் புகார் செய்தார்.
மேல்மிடாலத்தில் பஸ் சிறைபிடிப்பு-மறியல்: 2 பாதிரியார்கள் உட்பட 200 பேர் மீது வழக்கு
Published on

கருங்கல்:

கருங்கல் அருகே உள்ள உதய மார்த்தாண்டம் ஜங்ஷனில் இருந்து கைத விளாகம், மேல்மிடாலம் வழியாக கடலோரச்சாலை உள்ளது. இந்தச் சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டதால் மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன்பயனாக தொடங்கப்பட்ட சீரமைப்பு பணி தொடங்கிய சில நாட்களிலேயே கிடப்பில் போடப்பட்டது. இதனைக் கண்டித்து மேல்மிடாலம் மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த 4 அரசு பஸ்களையும் சிறை பிடித்தனர். போராட்டத்தில் அருட்பணியாளர்கள் ஹென்றி பிலிப், ஆன்றனி கிளாரட், ஜினிஸ் மற்றும் ஹெலன் நகர் மக்கள் கலந்துகொண்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஹெலன் ஜெனட் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் சாலைப்பணியை முடித்து தருவதாக எழுத்து பூர்வமாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மார்த்தாண்டம் பணிமனை மேலாளர் ஸ்டாலின் போராட்டம் தொடர்பாக கருங்கல் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் மேல்மிடாலத்தில் சட்ட விரோதமாக ஒன்றுகூடி அரசு பஸ்சை இயக்க விடாமல் சிறைபிடித்து போக்குவரத்து கழகத்திற்கு ரூ.15 ஆயிரத்து 400 இழப்பு ஏற்படுத்தியதாக மேல் மிடாலம் பங்கு தந்தை பிலிப் ஹென்றிகுயின், ஹெலன் நகர் பங்குதந்தை ஆரோக்கிய ஜெனிஷ், எழில், கிறிஸ்டோபர் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கிறிஸ்தவ பாதிரியார்கள் உட்பட 200க்கு மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்த செயல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com