search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்தோடு அருகே தேர்வில் தோல்வி அடைந்த பிளஸ்-1 மாணவன் தற்கொலை
    X

    சித்தோடு அருகே தேர்வில் தோல்வி அடைந்த பிளஸ்-1 மாணவன் தற்கொலை

    • மாணவர் தனேஷ்வரா 205 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்தார்.
    • மனம் உடைந்த தனேஷ்வரா வீட்டில் இருந்த தனது தங்கையிடம் குளித்து விட்டு வருவதாக கூறி சென்றார்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர் சித்தோடு ஆவினில் விரிவாக்க அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு தனேஷ்வரா (19) என்ற மகனும், மகாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.

    பாலகிருஷ்ணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து மகன், மகளை தமிழ்செல்வி கவனித்து வந்தார். மகன் தனேஷ்வரா அந்தியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். அதே பள்ளியில் அவரது மகள் மகாஸ்ரீ 9-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது தேர்வு விடுமுறை என்பதால் தனேஷ்வரா, மகாஸ்ரீ ஆகியோர் வீட்டில் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியானது. இதில் மாணவர் தனேஷ்வரா 205 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்தார். இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் இருந்த தனது தங்கையிடம் குளித்து விட்டு வருவதாக கூறி சென்றார்.

    நீண்ட நேரமாகியும் அவர் வராததால் தங்கை மகாஸ்ரீ போய் பார்த்தார். அப்போது மாணவர் தனேஷ்வரா தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர் சத்தம் போட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மாணவர் தனேஷ்வராவை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவரை பரிசோதனை செய்த டாக்டர் இறந்து விட்டதாக கூறினார்.

    இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×