கவுன்சிலரின் கணவர் மீது தாக்குதல்- ஊராட்சி தலைவர் கைது

செங்குன்றம் அருகே கவுன்சிலரின் கணவரை தாக்கிய ஊராட்சி தலைவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

செங்குன்றம்:

செங்குன்றத்தை அடுத்த லட்சுமிபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜீவா. இவர் பம்மதுகுளம் ஊராட்சியில் வார்டு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

இவரது கணவர் ரமேஷ் (வயது 45). இவர் சமீபத்தில் நடந்த பம்மதுகுளம் ஊராட்சி மன்ற கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா என்பவரை எதிர்த்து பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவர் ராஜா, ரமேசை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ரமேஷ் ஆவடி போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் சோழவரம் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து பம்மதுகுளம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com