பள்ளிபாளையம் அருகே துப்பாக்கியுடன் தங்கியிருந்த வட மாநில வாலிபர்கள் கைது

வீட்டிற்குள் இருப்பதை உறுதி செய்த போலீசார், அதிரடியாக வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த இரு வாலிபர்களையும் மடக்கிப்பிடித்தனர்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பள்ளிபாளையம் அருகே துப்பாக்கியுடன் தங்கியிருந்த வட மாநில வாலிபர்கள் கைது
Published on

பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வால்ராசபாளையத்தில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வாலிபர்கள் இரண்டு பேர் வந்தனர். அவர்கள் நூல் ஆலைகளுக்கு வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து வேலைக்கு சேர்த்துவிடும் ஏஜெண்டுகள் என சொல்லி, அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து தங்கியுள்ளனர். தினமும் காலையில் எழுந்து செல்வதும், நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்புவதுமாக இருந்துள்ளனர்.

இவர்களின் நடவடிக்கையில் அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து வெப்படை போலீஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். நேற்று மாலை வாலிபர்கள் வீட்டிற்குள் இருப்பதை உறுதி செய்த போலீசார், அதிரடியாக வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த இரு வாலிபர்களையும் மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த மணீஸ்குமார் (வயது 26), ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சாகர் (19) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த பெட்டியை போலீசார் சோதனை செய்தபோது, அதில் ஒரு ரிவால்வர் கைத்துப்பாக்கி மற்றும் 8 தோட்டாக்கள் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்து, ஆய்வு செய்ததில் அந்த துப்பாக்கிக்கு லைசென்ஸ் ஏதும் பெறவில்லை என்பது தெரியவந்தது.

இது குறித்து கேட்டபோது தங்களின் பாதுகாப்பிற்காக வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறுவதில் சந்தேகமடைந்த போலீசார், 2 பேரையும் கைது செய்து, அவர்களின் பின்னணி குறித்து,

தகவல்களை சேகரித்து வருகின்றனர். இங்கு ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்ட திட்டம் தீட்டியுள்ளனரா?, இவர்களுடன் கூட்டாளிகள் யாராவது இங்குள்ளனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com