பெரும்பாக்கம் ராஜசேகர் ஏற்பாட்டில் பெரும்பாக்கத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு: பா.வளர்மதி-கே.பி.கந்தன் பங்கேற்பு

அ.தி.மு.க. புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மற்றும் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.தர்பூசணி, இளநீர், வாழைப்பழம், வெள்ளரிக் காய், ஜூஸ், மோர், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் வழங்கப்பட்டது
பெரும்பாக்கம் ராஜசேகர் ஏற்பாட்டில் பெரும்பாக்கத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு: பா.வளர்மதி-கே.பி.கந்தன் பங்கேற்பு
Published on

சென்னை:

சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் நீர் மோர் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

அ.தி.மு.க. சென்னை புறநகர் மாவட்டம் பரங்கிமலை கிழக்கு ஒன்றியம் சார்பில் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளரும் பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளருமான பெரும்பாக்கம் எ.ராஜசேகர் ஏற்பாட்டில் மகளிர் அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மற்றும் சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. கந்தன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் நீர் - மோர் பந்தலை திறந்து வைத்தனர்.

இதில் தர்பூசணி, இளநீர், வாழைப்பழம், வெள்ளரிக் காய், ஜூஸ், மோர், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் வழங்கப்பட்டது

நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் டி.சி. கருணா, ஜி.எம். ஜானகிராமன், வி. குமார், 190-வது மாமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம், மற்றும் நிர்வாகிகள் செல்வ ராணி சுந்தர், சித்தாலப்பாக்கம் தாமோதரன், அரசங்கழனி கண்ணன், மேடவாக்கம் எம்.பி. கண்ணபிரான், எம்.ஜி.சக்திவேல், கோவிலம்பாக்கம் தேவராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மற்றும் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பெரும்பாக்கம் ராஜசேகர் சிறப்பாக செய்து இருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com