ஆட்டுக்கறி வைக்காதால் ஆத்திரம்: தந்தையை வெட்டிக்கொன்ற மகன்

இளங்கோவனுக்கும் அவரது மகன் தங்கதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தங்கதுரையை தேடி வருகிறார்,
ஆட்டுக்கறி வைக்காதால் ஆத்திரம்: தந்தையை வெட்டிக்கொன்ற மகன்
Published on

திருவோணம்:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஆம்பலாபட்டு தெற்குகுடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 53) இவரது தந்தை துரைமாணிக்கம் சமீபத்தில் இறந்தார். அதற்கான 16- வது நாள் நிகழ்ச்சி நேற்று இரவு இளங்கோவன் வீட்டில் நடைபெற்றது.

இதற்காக ஆட்டுக்கறி உணவு தயார் செய்யப்பட்டு உறவினர்களுக்கு பரிமாறப்பட்டது.

அப்போது இளங்கோவன் மகன் தங்கதுரை (25) உணவருந்த உட்கார்ந்தார். அப்போது அவருக்கு ஆட்டுகறி அதிகமாக வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இளங்கோவனுக்கும் அவரது மகன் தங்கதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தங்கதுரை தனது தாய் லட்சுமியிடம் எனக்கு அதிகமாக கறி வைக்கவில்லை என்று கூறி பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு லட்சுமி மகனை சமாதானப்படுத்தினார். பிறகு தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தங்கதுரை வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த தந்தை இளங்கோவன் தலையில் தாக்கினார். இதில் இளங்கோவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் தங்கதுரை அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இது குறித்து லட்சுமி பாப்பாநாடு போலீசில் புகார் அளித்தார், அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளங்கோவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தங்கதுரையை தேடி வருகிறார்,

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com