காசிமேட்டில் மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு- 5 பேர் கைது

புதுமனைகுப்பம் பகுதியில் பஸ் வந்து கொண்டு இருந்த போது திடீரென 5 பேரும் பஸ்சில் இருந்து இறங்கி கண்ணாடி மீது கல்வீசினார்.மாநகர பஸ் கண்ணாடியை உடைத்த திருவள்ளூரை சேர்ந்த விக்னேஷ், சேதுராமன், ராஜா, குமார் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
காசிமேட்டில் மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு- 5 பேர் கைது
Published on

ராயபுரம்:

பாரிமுனையில் இருந்து மணலி நோக்கி மாநகர பஸ் (56 டி) சென்று கொண்டு இருந்தது. கண்டக்டராக கொருக்குப்பேட்டையை சேர்ந்த ராஜி இருந்தார். பஸ்சின் படிக்கட்டில் வாலிபர்கள் தொங்கியபடி பயணம் செய்தனர்.

அவர்களை பஸ்சின் உள்ளே வரும்படி கண்டக்டர் கூறியும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்தனர். இதனால் அவர்களை கண்டக்டர் ராஜி கண்டித்தார். இதனால் அவர்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே காசிமேடு, சூரியநாராயணன் தெரு, புதுமனைகுப்பம் பகுதியில் பஸ் வந்து கொண்டு இருந்த போது திடீரென 5 பேரும் பஸ்சில் இருந்து இறங்கி கண்ணாடி மீது கல்வீசினார்.

இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் நொறுங்கியது.

இது குறித்து கண்டக்டர் ராஜி காசிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் கண்ணாடியை உடைத்த திருவள்ளூரை சேர்ந்த விக்னேஷ், சேதுராமன், ராஜா, குமார் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com