ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலி

அம்பேத்கர் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த துரைராஜ் மோட்டார் சைக்கிளோடு நிலை தடுமாறி கீழே விழுந்தார். விபத்து குறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலி
Published on

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள திருக்கண்டலம் ஊராட்சி, மடவிளாகம் காலனி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 62). கூலித் தொழிலாளி. இவர் பெரியபாளையம் அருகே உள்ள ஏனம்பாக்கத்தில் நடைபெற்ற உறவினர் நிகழ்ச்சியில் கலந்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த துரைராஜ், மோட்டார் சைக்கிளோடு நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் துரைராஜின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்திஅரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி துரைராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com