search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுட்டெரிக்கும் கோடை வெயில்- சாத்துக்குடி விலை அதிகரிப்பு
    X

    சுட்டெரிக்கும் கோடை வெயில்- சாத்துக்குடி விலை அதிகரிப்பு

    • சூட்டை தணிக்க மக்கள் பெரும்பாலும் சாத்துக்குடி ஜுஸ் குடிப்பது வழக்கம்.
    • சாலையோர கடைகளில் சாத்துக்குடி ஜுஸ் அதிக அளவில் நடந்து வருகிறது.

    தமிழகத்தில் கத்தரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் 109 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் அவதி அடைந்து வருகிறார்கள்.

    வெப்பத்தில் இருந்து தப்பிக்க குளிர்ச்சியான பழங்கள், தர்பூசணி மற்றும் பழச்சாறு குடித்து வருகிறார்கள். இதனால் சென்னையில் தற்போது ஆங்காங்கே சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகளில் சாத்துக்குடி, கிர்ணி, எலுமிச்சை உள்ளிட்ட பழச்சாறுகளின் விற்பனை சூடு பிடித்து உள்ளது.

    சூட்டை தணிக்க மக்கள் பெரும்பாலும் சாத்துக்குடி ஜுஸ் குடிப்பது வழக்கம். இதனால் சாலையோர கடைகளில் சாத்துக்குடி ஜுஸ் அதிக அளவில் நடந்து வருகிறது. இதனால் கடைகளில் சாத்துக்குடி விற்பனை வழக்கத்தை விட 2 மடங்கு அதிகரித்து உள்ளது.

    கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து தினசரி சாத்துக்குடி பழங்கள் விற்பனைக்கு வருகிறது. இன்று 20 லாரிகளில் சுமார் 160 டன் சாத்துக்குடி குவிந்தன. கோடை வெயில் தாக்கம் அதிகம் காரணமாக சாத்துக்குடி பழங்கள் தேவை வழக்கத்தை விட அதிகரித்து உள்ளதால் சாத்துக்குடி பழத்தின் விலையும் அதிகரித்து விற்பனையும் சூடு பிடித்து உள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ சாத்துக்குடி ரூ50-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளில் சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்கப்படுகிறது.

    Next Story
    ×