போராட்டம்
போராட்டம்

பெட்ரோல் போட பிச்சை எடுக்கும் நூதன போராட்டம்- காங்கிரஸ் பொருளாளர் தலைமையில் நடந்தது

விருகம்பாக்கத்தில் பெட்ரோல்-டீசல்-கியாஸ் விலை ஏற்றத்தை கண்டித்து காங்கிரஸ் பொருளாளர் ஜோதி பொன்னம்பலம் தலைமையில் நடந்தது.
Published on

சென்னை:

பெட்ரோல்-டீசல்-கேஸ் விலை உயர்வை கண்டித்து சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ஜோதி பொன்னம்பலம் தலைமையில் சாலிகிராமம் பெட்ரோல் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக கியாஸ் சிலிண்டரை பாடை கட்டி ஒப்பாரி வைத்தும் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அதன் பின்பு தட்டு ஏந்தி பிச்சை எடுத்து அதனை மத்திய அரசுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். முக்கிய சந்திப்பு பகுதியான சாலிகிராமம் பகுதியில் இன்று காலை நடந்த இந்த நூதன போராட்டத்தினால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

போராட்டம் குறித்து பொருளாளர் ஜோதி பொன்னம்பலம் கூறுகையில், விண்ணை முட்டும் விலைவாசி மத்திய பா.ஜ.க. ஆட்சியில் மேலும் மேலும் ஏறி வருகிறது. கொரோனாவில் இருந்து மீண்டு பொதுமக்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் இந்த நான்கு மாநில தேர்தல் நடந்து முடிந்த உடன் பெட்ரோல் டீசல், கியாஸ் விலை உயர்வை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வை ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இது பொதுமக்களை மிகுந்த பாதிப்படையும் செய்யும். பெட்ரோல்-டீசல் விலை உயரும் போது அனைத்து பொருட்களும் விலை உயரும். இதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள். இதனை கண்டிக்கும் வகையில் தான் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம். மத்திய அரசு உடனடியாக இந்த விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் விருகை பகுதி தெற்கு தலைவர் கே.கே. கோபாலசுந்தரம், மாவட்ட துணை தலைவர் ராம்குமார், மாவட்ட நிர்வாகிகள்சாலமன் சரஸ்வதி, குமாரவேல், இரா.ஏழுமலை, ராதாகிருஷ்ணன், வட்ட தலைவர் ஜெயக்குமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்ட நிர்வாகி வி.கார்த்திக், ரஷீத், மாவட்ட இணை செயலாளர் ரமேஷ் மற்றும் ஞானசாமி ராஜேந்திரன், யுகேந்தர், இளையராஜா, முத்துசாமி, பகுதி நிர்வாகிகள் சுரேஷ் மோகன் கொ.அ.ஜோஷி, சொக்கலிங்கம் பெரோஸ்க்கான், விஜய், ஆறுமுகம், விநாயகம் மற்றும் நமது காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com