search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் நகைக்கடையில் செல்போன் திருடிய டிப்-டாப் ஆசாமி
    X

    பாவூர்சத்திரத்தில் நகைக்கடையில் செல்போன் திருடிய 'டிப்-டாப்' ஆசாமி

    • கடை உரிமையாளர் கடையினுள் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்த போது ‘டிப்-டாப்’ நபர் செல்போனை எடுப்பது பதிவாகி இருந்தது.
    • பாவூர்சத்திரம் போலீசில் நகை கடையின் உரிமையாளர் புகார் அளித்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இருந்து கடையம் செல்லும் பிரதான சாலையில் குறும்பலாபேரி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    கடைக்கு பல வாடிக்கையாளர்கள் வந்து நகைகள் வாங்கி சென்ற நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பேண்ட் சட்டை அணிந்த 'டிப்-டாப்' நபர் ஒருவர் ரூ.350-க்கு பெண்கள் காலில் அணியும் வெள்ளி மெட்டி வாங்கி உள்ளார்.

    அப்போது ரூ.500 கொடுத்து விட்டு மீதி சில்லறையை நகைக்கடையின் உரிமையாளர் சந்திரசேகரன் எடுத்து கொடுக்கும் சில விநாடி இடைவெளியில் மேசையில் இருந்த கடைக்காரருக்கு சொந்தமான ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை தனது செல்போன் போன்று எடுத்து சட்டை பையில் வைத்துக் கொண்டு வேகமாக சென்று விட்டார்.

    இதுகுறித்து சில நிமிடங்கள் கழித்து தெரிந்து கொண்ட கடை உரிமையாளர் கடையினுள் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்த போது 'டிப்-டாப்' நபர் செல்போனை எடுப்பது பதிவாகி இருந்தது.

    ஒரு மணி நேரமாக தனது செல்போன் எண்ணிற்கு மற்றொரு செல்போன் மூலம் கடையின் உரிமையாளர் சந்திரசேகர் போன் செய்த பொழுது முழுமையாக ரிங் சென்ற நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் ஸ்விட்ச் ஆப் என வந்துள்ளது.

    இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசில் நகை கடையின் உரிமையாளர் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

    Next Story
    ×