மீஞ்சூர் அருகே சேதம் அடைந்த கொசஸ்தலை ஆற்று கரைபகுதியில் எம்.எல்.ஏ. ஆய்வு

கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.ஊராட்சி மன்ற தலைவர் உமையாள், வட்டாரத் தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
மீஞ்சூர் அருகே சேதம் அடைந்த கொசஸ்தலை ஆற்று கரைபகுதியில் எம்.எல்.ஏ. ஆய்வு
Published on

பொன்னேரி:

மீஞ்சூர் அடுத்த வெள்ளி வாயல் சாவடி ஊராட்சி துருக்கன் காலனி பகுதியில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கொசஸ்தலை ஆறு திரும்பும் இடத்தில் ஆற்றின் கரைப்பகுதி கரைந்து மிகவும் பழுதடைந்து முட்புதற்கள் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. கரைப்பகுதி சேதம் அடைந்தால் வெள்ளிவாயல்சாவடி, கொண்டக்கரை, பழைய நாப்பாளையம், உள்ளிட்ட கிராமங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

எனவே கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் துருக்கன் காலனியில் உள்ள சேதம் அடைந்த கொசஸ்தலை ஆற்றின் கரையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் இதனை சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது ஒன்றிய சேர்மன் ரவி, ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் நந்தகுமார், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், ஊராட்சி மன்ற தலைவர் உமையாள், வட்டாரத் தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com