மீஞ்சூர் அருகே காவலாளி அடித்துக் கொலை- இன்னொரு காவலாளி சரண்

பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த முரளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீஞ்சூர் அருகே காவலாளி அடித்துக் கொலை- இன்னொரு காவலாளி சரண்
Published on

பொன்னேரி:

மீஞ்சூர் அடுத்த காட்டூரை சேர்ந்தவர் முரளி (வயது 48). இவர் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவன தொழிலாளர்கள் குடியிருப்பின் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

இவருடன் பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் பாக்கம் பகுதி சேர்ந்த உதயன் (42) என்பவரும் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு இவர்கள் 2 பேரும் பணியில் இருந்தனர்.

அப்போது அவர்களுக்கு இடையே திடீர் என வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறி கைகலப்பானது. அப்போது ஆத்திரம் அடைந்த உதயன் கட்டையால் முரளியை சரமாரியாக தாக்கினார்.

இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த முரளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய உதயன் காட்டூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

காட்டூர் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட முரளியின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட முரளிக்கு கவுரி என்ற மனைவியும் தர்ணிகா (7)என்ற பெண் குழந்தையும் உள்ளது.

காவலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com