பவானி தளவாய்பேட்டையில் பசு மாட்டுடன் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பால் உற்பத்தியாளர்கள் தளவாய்பேட்டை பால் சொசைட்டி முன்பாக பசு மாட்டுடன் வருகை தந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் எந்த விதமான அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பவானி மற்றும் ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
பவானி தளவாய்பேட்டையில் பசு மாட்டுடன் பால் உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

பவானி:

பால் கொள்முதல் விலை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் அரசுடன் பேசிய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து நேற்று முதல் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், பால் வழங்குவதை நிறுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 2-வது நாளான இன்று காலை பவானி அருகில் உள்ள தளவாய்பேட்டையில் ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராஜ் கவுண்டர் தலைமையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருவது உள்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் தளவாய்பேட்டை பால் சொசைட்டி முன்பாக பசு மாட்டுடன் வருகை தந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எந்த விதமான அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பவானி மற்றும் ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com