மேட்டூர் அணை நீர்மட்டம் நிலவரம்

அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அணையில் தற்போது 85.58 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் நிலவரம்
Published on

சேலம்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 114.91 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 11 ஆயிரத்து 736 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 10 ஆயிரத்து 706 கனஅடியாக குறைந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

அணையில் தற்போது 85.58 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com