மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,248 கனஅடியாக சரிவு

அணைக்கு வரும் நீரை விட, அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 102.65 அடியாக இருந்து அணையின் நீர்மட்டம், இன்று காலை 102.61 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,248 கனஅடியாக சரிவு
Published on

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

நேற்று காலை வினாடிக்கு 1,422 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,248 கன அடியாக சரிந்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரை விட, அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 102.65 அடியாக இருந்து அணையின் நீர்மட்டம், இன்று காலை 102.61 அடியாக சரிந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com