மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 103.54 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 103.53 அடியாக சரிந்தது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
Published on

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1,500 கன அடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 1,222 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை சற்று குறைந்து வினாடிக்கு 1,212 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று 103.54 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 103.53 அடியாக சரிந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com